அதிரையில் சிறப்பாக நடைபெற்ற அதிரை அஹ்மத் அவர்களின் புதிய புத்தக வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)

adirai ahmadஅதிரையை சேர்ந்தவர் பன்னூல் ஆசிரியர் அதிரை அஹ்மத். பலதரப்பட தலைப்புகளின் கீழ் பல்வேறு வகையான அருமையான புத்தகங்களை எழுதியுள்ளார். அந்த வகையில் அதிரை அஹ்மத் அவர்களால் புதிதாக எழுதப்பட்ட “நல்ல தமிழ் எழுதுவோம் – மொழிப்பிழை நீக்கும் வழித்துணை நூல்” என்ற பெயரிலான புத்தகத்தை இலக்கியச்சோலை பதிப்பகம் சார்பாக இன்று வெளியிடும் நிகழ்ச்சி அதிரை ALM பள்ளியில் நடைபெற்றது.adirai zhmadஇந்த நிகழ்ச்சியில் அதிரை முஹம்மது தம்பி அவர்கள் வரவேற்ப்புரையாற்ற, புதிய விடியல் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் ரியாஸ் அவர்கள் முன்னுரை வழங்க அதனை தொடர்ந்து அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் தமிழ் ஆசிரியர் முனைவர்.அஜ்முத்தீன் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார். இதனை அடுத்து புத்தகத்தின் ஆசிரியர் அதிரை அஹ்மத் அவர்கள் ஏற்ப்புரை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து புத்தகம் வெளியீடு நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் முன்னால் தலைமையாசிரியர் ஜனாப்.ஹாஜா முஹைதீன் அவர்கள் புத்தகத்தை வெளியிட அதனை அதிரை அஹ்மத் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனை அடுத்து புதிய விடியல் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் ரியாஸ் அவர்கள் புத்தகத்தை வெளியிட காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் தமிழ் ஆசிரியர் முனைவர்.அஜ்முத்தீன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இதனை தொடர்ந்து அதிரை இணையதள நிருபர்களிடம் புத்தகம் நியூஸ்7 தொலைக்காட்சி இணை ஆசிரியர் குத்புத்தீன் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக அதன் ஆசிரியர் ஹசன் அவர்களும், அதிரை பிறை அதன் ஆசிரியர் நூருல் அவர்களும் அதிரை நியூஸ் சார்பாக அதன் மாணவ பத்திரிக்கையாளர் அஃப்ரித் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள். இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் அதிரை மாணவர்கள், பெரியவர்கள், இளம் பத்திரிக்கையாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Close