திருச்சியில் நடைபெற்ற மாணவர் இந்தியா அமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அதிரையர்கள்!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த ஈச்சம்பட்டி என்னும் ஊரில் உள்ள அன்வாருல் முஸ்லிமின் மெட்ரிகுலேசன் பள்ளியில் “மாணவர் இந்தியா” நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபேற்றது.

இந்நிகழ்ச்சி தமுமுக வின் மாநில தலைவர் J.S.ரிஃபாயி அவர்கள் தலைமைதாங்கினார்கள்.  இந்நிகழ்ச்சியை தமுமுக வின் அதிரை நகர மாணவர் அணி செயலாளர் நூர் முஹம்மது அவரகள் கிராஅத் ஓது துவங்கி வைத்தார்கள். இதனைத்தொடர்ந்து மாணவர் இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அதிரை ஷேக் அப்துல் காதர் அவர்கள் தொகுப்புரையாற்றினார்கள். வரவேற்ப்புரையை திருச்சி வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் R.சாதிக் அலி அவர்கள் நிகழ்த்தினார்கள்.

இதில் இணையப் பயன்பாட்டின் இன்றைய நிலை என்னும் தலைப்பில் ம.ம.க வின் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஹுசைன்கனி அவர்களும், கல்வியின் அவசியம் என்னும் தலைப்பில் ம.ம.க வின் மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா அவர்களும், மாணவரணியின் கூட்டமைப்பு என்னும் தலைப்பில் ம.ம.க வின் மாநில அமைப்புச் செயலாளர் மாயவரம் ஜே.அமீன் சுல்தான் அவர்களும், வரலாறு பற்றிய விழிப்புணர்வு என்னும் தலைப்பில் தமுமுக வின் மாநில செயலாளர் டி.அபுல் ஃபைசல் அவர்களும், ஊடகங்களில் மாணவர்கள் என்னும் தலைப்பில் தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர்.ஹாஜா கனி அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.

Close