அதிரை பிறையில் காணாமல் போனதாக பதியப்பட்ட மாணவர் வீடு திரும்பினார்

ansar khanhttps://adiraipirai.in/?p=20022

அதிரை சுரைக்காய் கொள்ளை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனரான முஹம்மது ஆரிப். இவரது மகன் அன்சர் கான். அதிரை காதிர் முஹைதீன் பள்ளி 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் நேற்றைய முன்தினம் இரவு பட்டுக்கோட்டைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் நேற்று இரவு வரை இவர் வீடு திரும்பாத காரணத்தால் நமது அதிரை பிறையிடம் தொடர்புகொண்டு செய்தி பதியுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க முழு விபரத்துடன் செய்தி வெளியிட்டோம்

இதனை நமது வாசகர்கள் நூற்றுக்கணக்காணோர் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் வைரலாக சேர் செய்து வந்தனர். இதனை அடுத்து தானாகவே இந்த சிறுவன் இன்று மதியம் வீடு திரும்பியதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். எனவே யாரும் அந்த பதிவை இனிமேல் பகிரவேண்டாம் என அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close