அப்பளம் பற்றி சில அரிய தகவல்கள்!

appalam 120 வருடங்களுக்கு முன்பெல்லாம் எங்கள் வீட்டில் பெரிய அண்டாவில் கூழ் கிண்டுவார்கள். அப்பளம், படையான் போன்றவைகள் வீட்டிலேயே செய்வதற்காக காலை 5 மணிக்கெல்லாம் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களெல்லாம் ஒன்றாக கூடி அப்பளம், படையான், கொத்தரவத்தல், மோர் மிளகாய் போன்றவைகளை இட வந்து விடுவார்கள். காலையிலேயே வீடு பெருநாள் போல ஜே ஜே என்று இருக்கும். வந்தவர்களுக்கெல்லாம் டீ பிஸ்கெட் என்று அமர்க்களப்படும். சிறுவர் சிறுமிகளுக்கோ ஏக கொண்டாட்டம். எங்கள் வீட்டின் வாசல் பெரிதாகையால் அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்களும் எங்கள் வீட்டில்தான் அப்பளம் மற்றும் படையான்களை காய வைப்பார்கள். அதெல்லாம் ஒரு காலம்….

தற்போது எல்லாம் கடைகளில் பாக்கெட் போட்டு கிடைப்பதால் அப்பளம் மற்றும் படையான் போடும் பழக்கமும் நின்று விட்டது. சவுதியிலும் கடைகளில் அப்பளம் பல டிசைன்களில் கிடைக்கிறது. அப்பளத்திற்கு சவுதிகள் வைத்துள்ள பெயர் ‘ஹூப்ஸ் அல் ஹிந்த்’ அதாவது ‘இந்திய ரொட்டி’ என்று பெயரிட்டுள்ளார்கள். 🙂 புரோட்டாவைப் போல வட்டமாக இருப்பதனால் இதனை ரொட்டி என்று நினைத்து இந்த பெயரை வைத்துள்ளார்கள்.

சாம்பார், ரசம், மீன் குழம்பு என்று எந்த குழம்புக்கும் தொட்டுக் கொள்ள இந்த அப்பளமானது ஏற்றதாக மாறி விடும். பாகிஸ்தானிகள் இதே அப்பளத்தை சற்று டிசைன் மாற்றி செய்கிறார்கள். கேரளாவில் அப்பளம் பிரியாணிக்கும் இருக்கும். எப்படியோ இந்தியர்களின் உணவு பழக்கத்தில் என்றுமே இடம் பிடித்த அப்பளத்தைப் பற்றியும் ஒரு பதிவு தேற்றியாகி விட்டது.

Close