மல்லிப்பட்டினம் அருகே விபத்துக்குள்ளான அதிரையர்! விரைந்து வந்து உதவிய மல்லிப்பட்டினம் சகோதரர்கள்!

  
மல்லிப்பட்டினத்தில் இருந்து புதுப்பட்டினம் செல்லும் சாலையில் அதிரையில் இருந்து வந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்

பின்னல் ஒரு கண்டைனர் வந்தது நல்ல வேலையாக அருகில் இருந்த நமதூர் சகோதரர்கள் அந்த கண்டைனரை கை அசைத்து நிறுத்தினார்கள்…

விபத்து நடந்த இடத்தில் அந்த வழியாக வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தி அவருக்கு உதவி செய்தனர் 

அவருக்கு கண் கை மற்றும் முகத்தில் சிறிய காயங்கள் ஏற்ப்பட்டது 

உடனே அவரை மருத்துவமனையில் சேர்க்க மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது 

அனால் அடிபட்டவர் மருத்துவ மனைக்கு செல்ல மறுத்தார் 

அனால் அவருக்கு கையில் பலத்த அடிப்பட்டு இருந்தது அவர் நிதான நிலையிலும் இல்லை சற்று மயக்கமுற்று இருந்தார் 

அவரது இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு மருத்துவமனைக்கு வர மாட்டேன் என கூரினார் 

அவரது சொந்தகாரர்களுக்கு தொடர்புகொண்டு பேசியும் அவர் ஆம்புலன்சில் ஏறவில்லை 

இறுதியில் ஆத்திரமடைந்த சகோதரர்கள் அவரை விட்டுவிட்டு சென்றார்கள் 

   

Close