அதிரை வீடுகளில் ஆட்டையப்போட காத்திருக்கும் திருடர்கள்! ஒரு பகீர் ரிப்போர்ட்

robbery-l1 copyஅதிரையில் சி.ஏம்.பி லேன் பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்றைய தினம் மதியம் சாப்பிட்டு உறங்கும் நேரத்தில் ஒரு வீட்டில் பின் வழியாக சுவர் ஏரி குதித்து துவைத்து காயப்போட்டிருந்த புது துணிகள் அனைத்தையும் திருடர்கள் எடுத்து கொண்டு இருந்தனர். திடீரென துணிகளை எடுக்கும் சத்தம் விட்டில் உள்ள ஒருவருக்கு கேட்டது. சத்தம் கேட்ட உடன் கதவை திறந்து பார்த்த பொது திருடர்கள் துணிகளை எடுத்து கொண்டு இருப்பதை பார்த்த அவர் அருகில் இருப்பவர்களை அழைப்பதற்க்காக சத்தமிட்டார். இதைக் கேட்ட அந்த திருடர்கள் துணிகளை தூக்கி எரிந்து விட்டு வந்த வழியாக தப்பி ஒடினர் .

குறிப்பு :திருடர்கள் நடமாட்டம் சி.ஏம்.பி.லேன் பகுதியில் அதிகமாக இருப்பதால் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

இது போன்று அதிரையில் கடந்த சில வாரங்களாக திருடர்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Close