அதிரையில் நாளை அமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள் கலந்துக்கொள்ளும் பொதுக்கூட்டம்

Mini_Vaithiyalingam_0தமிழகம் முழுவதும் தேர்தல் வேலைகள், செய்திகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அதிமுக வும் முதல் கட்டமாக தங்கள் தேர்தல் பிரச்சாரமாக கடந்த நான்கரை ஆண்டுகளாக தாங்கள் செய்த சாதனைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பட்டியலிட்டு மக்களுக்கு எடுத்துறைத்து அடுத்த சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியை மீண்டும் வெற்றிபெற செய்து ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கெல்லாம் சலைக்காதவர்களாக எதிர்கட்சிகளான திமுக, தேமுதிக, மதிமுக, பமக, இடதுசாரிகள் போன்ற கட்சிகள் கடந்த நான்கு ஆண்டுகளில் ஜெயலலிதாவின் ஆட்சியில் நடைபெற்ற சோதனைகளை வெளிகாட்டி எதிர்பிரச்சாரம் செய்டு வருகின்றனர். எதுஎப்படியோ இந்த முறை மக்களின் மனநிலையை பொருத்தே தேர்தல் முடிவுகள் அமையும்.

அந்தவகையில் அதிரையில் நாளை மாலை அதிமுக சார்பாக நமதூர் பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மாநில அமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

Close