Adirai pirai
posts தமிழகம்

பிப் 8-ம் தேதி வரை ஹஜ் பயணிகளுக்கான பாஸ்போர்ட் சிறப்பு முகாம்!

07-1452159526-passport-124-600திருச்சியில் ஹஜ் பயணிகளுக்கான பாஸ்போர்ட் சிறப்பு முகாம் பிப். 8-ம் தேதி வரையில் நடைபெறுகிறது என மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ், லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள் செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது:

ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக பாஸ்போர்ட் விண்ணப்பித்து பல்வேறு காரணங்களால் வரப்பெறாதவர்கள் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வந்து மனு செய்து பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, போலீஸ் அறிக்கை வரப்பெறாமலும், இன்னும் பல்வேறு காரணங்களாலும் இதுநாள்வரையில் பாஸ்போர்ட் கிடைக்கப்பெறாதவர்கள் தங்களது கோப்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் திருச்சி மரக்கடையில் அமைந்துள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் வந்து மனுசெய்து பயன்பெறலாம்.

இதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 8-ம் தேதி வரையில் நடைபெறுகின்றது. அலுவலக நாட்களில் காலை முதல் பிற்பகல் வரையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் வழங்கும் மையத்தில் (செல்) விண்ணப்பிக்கலாம். அது சமயம் இணையதளம் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பித்தற்கான ஏஆர்என் நகல் ஒன்றும் இணைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.