அதிரையிலிருந்து திருச்சி விமான நிலையம் செல்வோர்களுக்கான நல்ல யோசனை

trichy-airportஅதிரையிலிருந்து சென்னை விமான நிலையம் வழியாக வெளிநாடு செல்வதற்கு போதுமான நேரடி ஆம்னி பேருந்து வசதி உள்ளதால் அதில் இலகுவாக சென்று விடுகின்றனர். ஆனால் திருச்சி விமான நிலையம் செல்லும் அதிரையர்களுக்கு போதுமான பேருந்து வசதி இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கில் பணம் செலவளித்து காரில் செல்லும் நிலை உள்ளது.

ஆனால் இது போன்று திருச்சி செல்வோர்களுக்கு இரவு 8 மணிக்கு அதிரையிலிருந்து பேராவூரனி, புதுக்கோட்டை வழியான விமான நிலையத்துக்கு நேரடியாக அரசு பேருந்து வந்துசெல்கின்றது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறோம்.

தகவல்: ஹாஜா முஹைதீன்

Close