அதிரை பிலால் நகர் பகுதிக்கு பிறக்கிறது விடிவுகாலம்! (படங்கள் இணைப்பு)

bilal nagarபிலால் நகர் பகுதி அதிராம்பட்டினத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஏரிப்புறக்கரை ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு அடிப்படை வசதிகள் எதுவுமின்று இப்பகுதி மக்கள் தவித்து வந்தனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் N.R.ரங்கராஜன் அவர்கள் இப்பகுதிகளுக்கு சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை சட்டமன்ற கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அவர் இப்பகுதிகளின் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக வந்த போது இப்பகுதிகளின் துயரங்களை கண்டு சென்றார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மத்திய அரசின் தூய்மை இந்தியா பணிக்காக வேண்டி பிலால் நகர் வந்த அரசு ஊழியர்களை அப்பகுதி மக்கள் சுற்றுவளைத்து தங்கள் பகுதி பிரச்சனைகளை முறையிட துவங்கினர். இது குறித்த தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய PTI அதிகாரி பிச்சை முஹைதீன் பிலால் நகர் பகுதிக்கு விரைந்து அங்குள்ள பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கேட்டு அறிந்தார்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் வீடுகளுக்கு கழிப்பரை கட்டிக்கொடுப்பது, குப்பைகளை அள்ளுவது, சுகாதார சீர்கெடுகளை அகற்றுவது, குப்பைத்தொட்டிகளை அமைப்பது, கால்வாய் அமைப்பது இந்த பணிகளை நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பிலால் நகர் பகுதி இளைஞர்களெ செய்வது போன்றவற்றை அறிவித்து மக்களுக்கு ஆறுதல் அளித்து சென்றார். அதுபோக இப்பகுதிகளில் இரண்டு தாழ்வான தண்ணீர் தேங்கும் பாதைகளை செப்பனிட்டு சாலை அமைப்பது உள்ளிட்டவற்றை அறிவித்தார்.

இதில் ஒரு சாலைக்கு ருபாய்.14 லட்சமும், மற்றொரு சாலைக்கு சாலைக்கு 3 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிலால் நகர் பகுதியில் வெள்ள நீர் புகுந்து விடாமல் இருக்க ராட்சத தடுப்பு சுவரை ரூபாய்.27 லட்சம் செலவில் கட்டுவது உள்ளிட்டவற்றை அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று அப்பகுதிகளை சேர், சகதி என்றெல்லாம் பாராமல் இறங்கி பார்வையிட்டு நாளை முதல் இதற்கான பணிகளை துவங்குவதற்கு உத்தரவிட்டார். இவர்களுடன் ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவர் முத்துக்கிருஷ்ணன், பிலால் நகர் பொதுமக்கள் உடனிருந்தனர்.

கூடிய விரைவில் நமதூர் பிலால் நகர் பகுதிக்கு விடிவுகாலம் பிறக்கும் என எதிர்பார்ப்போம்…

Close