அதிரையில் சிறப்பாக நடைபெற்ற அ.தி.மு.க வின் பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

admk

அதிரையில் இன்று மாலை 6 மணியளவில் பேருந்துநிலையத்தில் அ.தி.மு.க சார்பாக எம்.ஜி.ஆர் அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு PAPCMS தலைவரும், பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளருமான P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

இதில் அதிரை அதிமுக நகர செயலாளரும் அதிரை பேரூராட்சி துணைத் தலைவருமான பிச்சை அவர்கள் வரவேற்புரையாற்ற, பட்டுக்கோட்டை ஒன்றிய கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்புரையாற்றுவதற்காக வருகை தருவதாக அறிவிக்கப்பட்ட மாநில அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் சில அவசர அலுவல்கள் காரணமாக கலந்துக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் இதில் கழக விவசாய பிரிவு தலைவர்  துரை.கோவிந்தராஜன், தலைமை கழக பேச்சாளர் பி.லில்லி ராஜ், தஞ்சாவூர் நாடாளமன்ற தொகுதி உறுப்பினர் கு.பரசுராமன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தி, தஞ்சை தொகுதி கழகச் செயலாளர்  துரை.திருஞனம், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.அப்துல் அஜீஸ், பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் ஜவஹர்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் அ.மலைஅய்யன் மற்றும் பலர் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் அதிரை நகர கழக நிர்வாகிகளான அவைத்தலைவர் முண்டாசு அப்துல் காதர், துரை.பாஞ்சாலன், அதிமுக நகர துணை செயலாளர் முஹம்மது தமீம், ஜே.பூங்கொடி, வசந்தா, ஆரிப், அசோக், வீரம்மாள், வார்டு கவுன்சிலர்கள் சிவக்குமார், அபுதாஹி, செந்தில், பூபாலன், செல்வம், பானுமதி, நகர பாசரை செயலாளர் அஹமது தாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட பிரிவு ஒன்றிய நகர பொறுப்பாளர்கள், மாவட்ட பிரிவு பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

Close