அதிரையில் வங்கிகள் இயங்கவில்லை!

வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பிரச்னையில் விரைவான ஒப்பந்தத்தை வலியுறுத்தி இன்று அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பெரும்பாலான தனியார் வங்கிகளின் 500 கிளைகளில் பணியாற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பதாக, வங்கித் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த வேலைநிறுத்தத்தால் மதுரை மாவட்டத்தில் ரூ.500 கோடிக்கு மேல் வங்கிப் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
பெரும்பாலான வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன. 25 சதவீத ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாள் பணி, ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Close