Adirai pirai
Dr.Pirai

வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியீடு!

Tamil_Daily_News_91146051884தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் புதன்கிழமை (ஜன.20) வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:

இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்புப்படி 1.1.2016-ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வந்தது. மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு செப். 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் கீழ் புதிதாகப் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் மேற்கொள்ளக் கோரி வாக்காளர்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வாக்காளர் இறுதி பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தாங்கள் வாக்களித்து வரும் வாக்குச் சாவடி மையத்துக்குச் சென்று, தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறு ஏதுமின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம். தவறு ஏதும் இருந்தால் உரிய படிவத்தை வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் கேட்டுப் பெற்று, நிறைவு செய்து அளிக்கலாம்.

மேலும், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளபடி ஜன. 31 மற்றும் பிப். 6-ம் தேதி அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அப்போது, வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க அல்லது நீக்கம் மற்றும் திருத்தம் ஏதுமிருந்தால் தொடர்புடைய வாக்கு சாவடி மையங்களில் மனுக்கள் அளிக்கலாம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy