உலகின் மிக வயதான ஆண் ஜப்பானில் மரணம்!

26உலகின் மிக வயதான ஆணாக விளங்கிய யாசுடாரோ கொய்டே தனது 112-ஆவது வயதில் ஜப்பானில் செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தார்.யாசுடாரோ கொய்டே, ஜப்பானின் சுருகா நகரத்தில் கடந்த 1903-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தார். இவர், தையல் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கின்னஸ் புத்தகத்தில் “மிகவும் வயதான ஆண்’ பட்டியலில் இடம்பெற்றிருந்த மற்றொரு ஜப்பானியரான சகாரி மோமய் கடந்த ஆண்டு மரணமடைந்ததற்கு பிறகு, கொய்டே அந்த இடத்தைப் பிடித்தார். உலகின் மிகவும் வயதான ஆண்கள் பட்டியலில், கொய்டேவுக்கு அடுத்தபடியாக யார் உள்ளார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. உலகின் மிகவும் வயதான பெண்மணியாக விளங்கும் 116 வயதுடைய சூசன்னா மஸ்ஹாட் ஜோன்ஸ், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.

Close