உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கா?.. இங்கே போய்ப் பாருங்க!

voteதமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதை தற்போது ஆன்லைனிலும் போய்ப் பார்த்து நமது பெயர் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையத தள இணைப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் போய்ப் பார்த்து நமது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.

Voters can check their names online

பெயர் இடம் பெறாதவர்கள் அல்லது தவறுகள் இருப்பதாக தெரிய வந்தால் அதைத் திருத்தி் கொள்ளவும், பெயர் இல்லாவிட்டால் சேர்க்கவும் முடியும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Close