அதிரை பேருந்து நிலைய வேண், கார் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து TNTJ அன்வர் அலி அவர்களின் நேர்காணல் (வீடியோ இணைப்பு)

anwar ali tntj

அதிரை பேருந்து நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூர் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் S.S.பழனிமானிக்கம் அவர்களின் நிதி ஓதுக்கீடு மற்றும் அதிரை பேரூராட்சியின் பொதுநிதி ஆகியவை சேர்ந்து மொத்தம் 38 லட்சம் ருபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. ஆனால் இன்றளவும் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதற்க்கு காரணம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார் மற்றும் வேண்கள் என்றும், இதன் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்கள். பொதுமக்கள் வெயிலில் நின்றுக்கொண்டிருக்கின்றனர் என்றும் பேரூராட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு RTO முன்னிலையில் இரு தரப்பினருக்கு சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதிரை காதர் முஹைதீன் பள்ளி அருகாமையில் புதிய டாக்ஸி மார்ட் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.

ஆனால், அதுவும் பயன்பாட்டுக்கு வராமல் இருந்துவந்தது. இந்நிலையில் இது குறித்து அதிரை சேர்மன் மதுரை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை பதிந்தார். இதனை அடுத்து அக்டோபர் 14 தேதி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த டாக்ஸ், வேண்களை அகற்ற உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. இதன் பின்னரும் எந்த மாற்றமும் இல்லாத காரணத்தினால் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை பதிந்தார். இதனை தொடர்ந்து இன்று பட்டுக்கோட்டையில் புதிதாக பொறுப்பேற்ற ASP அரவிந்த் மேனம் அவர்கள் மேல்பார்வையில் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதுடன், அங்கு நிறுத்தப்பட்ட கார் மற்றும் வேண்கள் புதிதாக காதிர் முஹைதீன் பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள டாக்ஸி மார்டுக்கு இடமாற்றம் செய்ப்பட்டது. இதனால் எந்த அசம்பாவீதமும் நிகழாத வண்ணம் போலிசார் அதிரையில் குவிக்கப்பட்டனர்.

Close