அதிரை லயன்ஸ் சங்கம் சிறப்பாக நடத்திய கேன்சர் பரிசோதனை முகாம்! (படங்கள் இணைப்பு)

LNஅதிரை வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் லயன்ஸ் சங்கம் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் செண்டர் சார்பாக புற்றுநோய் கண்டரியும் முகாம் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு துவங்கிய இம்முகாமில் அதிரையின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டு ரூபாய்.1500 மதிப்பிலான FNAC பாப்ஃஸ்மியர் பரிசோதனை செய்துக்கொண்டனர்.

இதில் மருத்துவர்கள் கிருஷ்னமூர்த்தி M.S, கௌசல்யா M.D,DGO, அப்துல் ஹக்கீம் M.D,D.A, ஜீவனாதன்,  தீனா B.D.S ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பான மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Close