தஞ்சையில் 23,790 பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்!

05MA-TVL-EXAM_1258406g தஞ்சை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்பி குரூப் 2 தேர்வினை 23,790 பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு தொகுதி 2 தேர்வு தஞ்சையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 2 ஏ பதவியில் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு 1,863 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்து தேர்வுகள் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 30 ஆயிரத்து 570 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 6 ஆயிரத்து 780 பேர் தேர்வு எழுத வரவில்லை. நேற்று தஞ்சை மாவட்டம் முழுவதும் 23,790 பேர் குரூப் 2 தேர்வை எழுதினர். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரியில் நடந்த தேர்வை கலெக்டர் சுப்பையன் ஆய்வு செய்தார்.

Close