இத்துப்போன அதிரை ஈ.பி!

அதிரை பேரூராட்சி 21வது வார்டுக்கு உட்பட்ட புது ஆலடித் தெரு (செட்டித்தோப்பு) இல் அமைந்திருக்கும் சிமெண்ட் மின்கம்பம் ஒன்று கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்து எழும்புக்கூடு போல் உள்ளே உள்ள கான்கிரிட் கம்பிகள் எல்லாம் தெரிந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இது குறித்து பொதுமக்கள், சமுக ஆர்வலர் ஹாலிக் அதிரை மின்வாரியத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

அதன் பின்னர் கடந்த வருடம் அப்பகுதிக்கு புதிய மின்கம்பம் மாற்றுவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டதுடன் மின்கம்பமும் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் இன்றி புதிதாக கொண்டுவரப்பட்ட மின்கம்பமும் வைத்த மாற்றப்படாமல் வெயில், மழையில் கிடந்து பழுதாகி வருகின்றது. இதன் காரணமாக அந்த மின்கம்பத்தை கடந்து செல்லும் பெண்கள் குழந்தைகள் அச்சத்துடன் செல்கின்றனர். 

இது குறித்து அதிரை மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!!! 

    
   

Close