தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன. 28-ல் உள்ளூர் விடுமுறை!

201410130351048540_Thanjavur-Collector-gave-new-dress-sweets-of-Diwali_SECVPFதிருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜன. 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஸ்ரீ தியாகராஜரின் 169 ஆம் ஆண்டு ஆராதனை விழாவையொட்டி, ஜன. 28ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

அதற்கு பதிலாக பிப். 13ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை அந்நிய செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால், மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.

Close