அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் கண்கவர் அணிவகுப்புடன் நடைபெற்ற குடியரசு தின விழா (படங்கள் இணைப்பு)

  
இன்று நாடு முழுவதும் இந்தியாவின் 67வது குடியரசு தின விழா கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையை பொருத்தவரை பேரூராட்சி, காவல்நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் இந்த விழாவினை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில் அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு குடியரசு தின விழா நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் கண்கவர் அணிவகுப்புடன் துவங்கியது. 

இதில் கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியர் வரவேற்ப்புறையாற்றினார்கள். இதனைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர்.ஜலால் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள். இதனைத்தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் கனி அவர்கள் குடியரசு தின சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 

    
    
   

Close