அமெரிக்க, ஜப்பான், சீனா, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி ஆகும் அதிரை வெள்ளை இறால்கள்!

அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலைகளில் கடந்த 2 தினங்களாக வெள்ளை இறால்களை அதிக அளவில் பிடிபடுகிறது. ஒரு கிலோ பெரிய வெள்ளை இறால் ₹400 க்கு விற்பனை ஆகிறது. இப்பகுதியில் பிடிபடும் வெள்ளை இறால்கள் சிங்கப்பூருக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. மிகச் சிறிய இறால்கள் உள்ளூர் மார்க்கெட்டில் விற்பனையாகிறது.

தற்போது வெள்ளை இறால் வரத்து அதிகமாக உள்ளதால் இறால் பிடிப்பதில் மீனவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து மீனவர் சங்கள் அவர்கள் கூறுகையில், “பெரிய வகை வெள்ளை இறால் மீனவர்கள் வலையில் அகப்பட்டு வருகிறது. இறால்கள் மொத்தமாக வாங்கி சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து அமேரிக்கா, ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது” என்றார்.

Reference: dinakaran, page 5

Advertisement

Close