முதலமைச்சரிடம் கோட்டை அமீர் விருது பெற்ற அதிரை M.B.அபூபக்கர்

 அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் M.B.அபூபக்கர். அதிரை அஜ்ஜாவியத்ஷ் ஷாதுலிய்யாவின் செகரட்டரியாக உள்ளார். அதிமுகவின் மாவட்ட சிறுபாண்மை நல துணைச் செயலாளராக உள்ளார். வருடா வருடம் மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது வழங்கப்படுவது தமிழக அரசின் வழக்கம் அந்த வகையில் அதிரையை சேர்ந்த அபூபக்கர் அவர்களின் பெயர் கோட்டை அமீர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அதிரை அபூபக்கர் அவர்களுக்கு கோட்டை அமீர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நமதூரை சேர்ந்த ஒருவர் இந்த விருதை பெறுவதால் சென்னையில் உள்ள அதிரையர்கள் இதனை காண்பதற்காக மெரினா கடற்கரையில் கூடினர். பல தொலைக்காட்சிகளில் இதனை கண்டு மகிழ்ந்தனர்.

  
  

Close