அதிரை பிறையில் ஊருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்திகளை பதியமாட்டோம்! அப்படிப்பட்ட பாப்புலாரிட்டி தேவையில்லை!

  அதிரையில் கடந்த 4 ஆண்டுகளாக அதிரை பிறை இணையதளம் துவங்கப்பட்டு அதிரையின் நிகழ்வுகளை பதிந்து வருகிறோம். எங்கள் செய்திகளில் சமுதாய அக்கரையுடனும், செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல வெண்டும் என்ற நோக்கத்துடன் செய்திகளை வெளியிடுகிறோம். மேலும் இந்த இணையதளம் அதிரை மற்றும் பொதுமக்களின் சமுதாய நலனுக்காகவும் என்றென்றும் பாடுபடும். 

அந்தவகையில் சில செய்திகள் பதிந்தால் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள், பொதுப்பெயருக்கு களங்கம் ஏற்படும், எந்த தவறும் செய்யாமல் ஒரு நிறுவனத்தின் பெயருக்கு தீய பெயர் ஏற்படுத்துவது என்பது போன்ற செய்திகளை முற்றிலுமாக புரக்கணித்து தணிக்கை செய்து வெளியிடுகிறோம். அந்தவகை நேற்று நடந்த சம்பவம் குறித்து அதிரையின் பிற இணைதளங்களிலும், வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமுக வலைத்தளங்களிலும், தமிழக செய்தித்தளங்களில் பதிந்துள்ளனர். இதனை நாங்கள் பதிவிட விரும்பவில்லை. காரணம் ஊடக பொறுப்பு எங்கள் மீது இருந்தாலும் சமுக அக்கரை  அதிகமாக தேவை. அந்தவகையில் கடந்த 60 ஆண்டுகளாக நற்பெயருடன் செயல்பட்டு வந்த ஒரு கல்வி நிறுவனத்தில் யாரோ ஒருவர் செய்த தவறுக்காக அந்த நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்ப வில்லை. அந்த செய்தியை பதிந்துதான் நாங்கள் பிரபலம் ஆக வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. 

மேலும் பலர் அந்த படத்தையும் செய்தியில் பதிவிடுகின்றனர்.  பல பெண்களும் குழந்தைகளும் இதனை பார்க்கின்றனர் என்ற அக்கரை இன்றி பதிவிடுகின்றனர். நமதூர் இளைஞர்கள் மத்தியில் எப்படி எந்த செய்தியை பகிர்வது என்ற பொறுப்பு இன்றி பகிர்ந்ததால் நமதூரின் பேருமைக்குறிய அந்த கல்வி நிறுவனத்தின் பெயர் தமிழக ஊடகங்களின் மத்தியில் அவப்பெயருக்கு உள்ளாகி இருக்கின்றது. காதில் கேட்டவைற்றையெல்லாம் பகிர்பவன் பொய்யன் என்ற ஹதீஸின் படி தீர விசாரித்து செய்தி பதிவிட வேண்டும்.

மீண்டும் ஒரு முறை கூறிக்கொள்கிறேன், நமதூரின் பெருமைக்குறிய ஒரு கல்வி நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்தி பதிந்துத்தான் பிரபலம் ஆகவேண்டும் என்றால் அப்படிப்பட்ட எதுவும் எங்களுக்கு தேவையில்லை.

இப்படிக்கு,

நூருல் இப்னு ஜஹபர் அலி, (ஆசிரியர்)

அதிரை பிறை

Close