Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை சார்பதிவாளர் அலுவலகத்தில் “லஞ்சம்” காணவில்லை!

ltnmஅதிரையில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷிபா மருத்துவமனை அருகில் அதிரையை சேர்ந்தவரால் இலவசமாக வழங்கப்பட்டு தமிழக அரசால் கடந்த மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க அதிரை பிறையால் இந்த 2016 ஆம் ஆண்டுக்கான காலண்டர் அதிரையின் அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த பள்ளிகளின் படங்களுடனும், மருத்துவமனைகளில் தாய்ப்பாலின் மகத்துவங்கள் குறித்தும் அதிரை பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்னும் வாசகம் அடங்கிய காலண்டர்களும் வைக்கப்பட்டன.

இதில் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட காலண்டர் முதல் நாளிலேயே அகற்றப்பட்டு அந்த அட்டையை எழுத்தட்டையாக பயன்படுத்தியதாக கூறப்பட்டது. இதனை அடுத்து நமது நிருபர் அதே வாசகம் பொருத்திய புதிய காலெண்டர் ஒன்றை மீண்டும் அந்த இடத்தில் மாட்டினார். இந்நிலையில் நாம் எதேர்ச்சையாக சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் போது அங்கு லஞ்சத்தை மறைக்கும் வகையில் லஞ்சத்தில் உள்ள “ல” என்ற எழுத்தை மட்டும் மறைத்துள்ளனர்.

இதனை அவர்கள் செய்ததன் மூலம் லஞ்சத்துக்கு ஆதரவானவர்கள் இவர்கள் என்பது சாதாரண ஒரு குடிமகனும் புரிந்துக்கொள்வார். 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy