கொசுக்கடியால் தூக்கம் தொலைக்கும் அதிரை வாசிகள்!

Moskitஇயற்கையாகவே குளிர்காலங்களிலும், மழைக்காலங்களிலும் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுவது வழக்கம். தற்போது குளிர் காலம் நிலவி வருவதால் மாலை. இரவு, அதிகாலை நேரங்களில் கொசுத்தொல்லை வழக்கத்திற்கு அதிகமாக காணப்படுகிறது. கொசுபத்திகள், எலெக்ட்ரானிக் கொசுபத்திகள் வைத்தாலும் கொசுத்தொல்லை ஒழியவில்லை.

இதன் காரணமாக இரவு நேரங்களில் அதிரையர்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை ஊர் முழுவதும் கொசுமருந்து வாகனத்தை அடித்தால் இதன் மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம் என அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close