சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.50 கிலோ தங்கம் பறிமுதல்!

Tiruchi_airport_1869704gசிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.50 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் திருச்சியில் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை பகலில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியை வந்தடைந்தது. இதற்கிடையே அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மத்தியவருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் திருச்சி, மற்றும் சென்னை விமானநிலையத்தில் காத்திருந்தனர்.

திருச்சியில் பயணிகளிடம் சோதனை நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் முருகேசன் (25) என்ற பயணியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கடத்தி வந்த ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 1.50 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வரும் சத்தியசீலன் என்பவரிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

அதன் பேரில் அவரை பிடித்து அவரிடமிருந்த தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்ததா, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதன் அடிப்படையில் மத்தியவருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Close