பாதுகாப்பு நிமித்தமாக சவுதியில் புதிய சட்டம்..!

file-25-1431259630025736000சவுதியில் புது சட்டம் , இனிமுதல் கைரேகை பதிவு சரிபார்த்த பிறகு மட்டுமே சிம் கார்டு (SIM CARD) வழங்கப்படும் சவூதி மொபைல் போன் சந்தாதாரர்கள் புதிய சிம் அட்டைகள் பெற தங்கள் கைரேகைகள் பதிவு செய்ய வேண்டும்.

தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணைக்குழு (CITC) படி, நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிமித்தமாக இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இருப்பினும் டாக்டைம் CARD வாங்க மற்றும் POST PAID கட்டணம் கட்ட இந்த கைரேகைகள் தேவையான பதிவு தேவையில்லை. புதிய சட்டம் சுற்றுலா பயணிகள், வளைகுடா குடிமக்கள், ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணைக்குழு (CITC) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Close