அதிரையில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கான இறுதிக்கட்ட அழைப்புப் பணிகள் தீவிரம் (படங்கள் இணைப்பு) 

 நாளை 30/01/2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தப்பெறவுள்ளது. இதற்காக அழைப்புப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதன் இறுதி கட்டமாக அதிரை கிளை சார்பாக பல்வேறு வகையான அழைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக அதிராம் பட்டிம் TNTJ கிளை நிர்வாகிகள். முக்கியபிரமுகர்களை சந்தித்து ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு வரும்படி அழைப்புவிடுக்கப்பட்டது. மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை ஒட்டி தொண்டர் அணி வீடு வீடாக சென்று தாயத்து/ தகடு/சீனாகரம்/ போன்ற அல்லாஹ்க்கு இனைவைக்கும் பொருட்களை அகற்றும் பணியில்.அதிராம் பட்டிணம் TNTJ.தொண்டர்அணியினர் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக 29.01.2016. வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து விளக்கமளிக்கும் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலத்தெரு சானவயலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிரையில் நடைபெறும் அல்ஹிக்மா மகளிர் அரபிக் கல்லூரியின் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


  
  
  
  

Close