வியாபாரி வீட்டில் நகைகள் திருட்டு!

d42e1b44-12d8-4ed8-8b7b-ddf42948024cபட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சரவணப்பெருமாள் (40). பழைய இரும்பு வியாபாரி. கடந்த 19-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்ற இவர் கடந்த 26-ம் தேதி ஊர் திரும்பினார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது வாசல் கதவு பூட்டை உடைத்து வீட்டினுள் புகுந்த நபர்கள் சமையலறையில் ஒரு டப்பாவில் வைத்திருந்த ரூ. 60,000 மதிப்புள்ள பவுன், வெள்ளி நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Close