அதிரை இமாம் ஷாபி பள்ளி செல்லும் சாலையில் ஒட்டு போடும் பணி தீவிரம்! (படங்கள் இணைப்பு)

   அதிரை பேருந்து நிலையம் முதல் வண்டிப்பேட்டை வரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும் அதிரை இமாம் ஷாபி அருகே உள்ள உள்ள சாலை அண்மையில் பெய்த மழை காரணமாக குண்டுக் குழியுமாக பழுதடைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர்.

இந்த சாலையில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள், பள்ளி மாணவ மாணவிகளை சவாரிக்காக ஏற்ற செல்லும் ஆட்டோ, கார்கள், இரு சக்கர வாகனங்கள் என அயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் மிக முக்கியமான சாலை இது.

எனவே இந்த சாலையில் வாகன ஓட்டிகள் இடையூறின்றி செல்வதற்காக குண்டும் குழியுமான பகுதிகளுக்கு பேஜ்வொர்க் (ஒட்டு) போடும் பணி நடைபெற்று வருகிறது.

  

Close