அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு !

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது .அதில் தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009ன் படி திருமணங்களை கட்டாயம் பதிவுத் துறையில் பதிவு செய்ய வேண்டும் .

இதற்கான முதல் நிபந்தனை :

மணமகன் -21 வயதையும் ,
மணமகள் -18 வயதையும் 
பூர்த்தி செய்தவர்களாக இருக்க வேண்டும் .திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் .தவறினால் தாமதக் கட்டணத்துடன் 150 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் .

அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மூலம் திருமணங்களை பதிவு செய்ய வருவோர் மணமக்களின் ஆதாரமான நகலைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . 

Advertisement

Close