துபையில் இன்னும் 7 நாட்களில் நகரின் முக்கிய வீதிகளில் DUBAI TRAM அறிமுகப்படுத்த உள்ளது !

சமீபத்தில் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்த சர்வதேச வர்த்தக திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ள துபாய் அரசு விரைவில் இன்னும் 7 நாட்களில் துபாய் நகரின் வீதிகளில் அதிநவீன ‘டிராம்’ (ரெயில்களை போல் தண்டவாளத்தின் மீது சாலைகளின் குறுக்கேயும் ஓடும்) வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

முதல்கட்டமாக 11 நிலையங்களின் வழியாக 10.6 கிலோ மீட்டர் தூரம் வரை டிராம் பாதைகள் அமைக்கப்பட்டு, இதற்கான சோதன ஓட்டமும் வெற்றிகரமாக நடந்துள்ளது. துபாய் மெரினா மால் நிலையத்தில் இருந்து போலீஸ் பயிற்சி கழகம் வரையிலான இந்த வழித்தடத்தில் 11 டிராம்கள் இயக்கப்பட உள்ளது.

படிப்படியாக இந்த தூரத்தை 17 நிலையங்களை கடந்து 14.6 கிலோ மீட்டராக நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


 

Advertisement

Close