கோட்டை அமீர் விருது பெற்ற அதிரை M.B.அபூபக்கர் அவர்கள் அமைச்சர் வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து வாழ்த்து!

  
அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் M.B.அபூபக்கர். அதிரை அஜ்ஜாவியத்ஷ் ஷாதுலிய்யாவின் செகரட்டரியாக உள்ளார். அதிமுகவின் மாவட்ட சிறுபாண்மை நல துணைச் செயலாளராக உள்ளார். வருடா வருடம் மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது வழங்கப்படுவது தமிழக அரசின் வழக்கம் அந்த வகையில் அதிரையை சேர்ந்த அபூபக்கர் அவர்களின் பெயர் கோட்டை அமீர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அதிரை அபூபக்கர் அவர்களுக்கு கோட்டை அமீர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிலையில் அபூபக்கர் அவர்கள் வீட்டு வசதி மற்றும் வேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர்களுடன் அதிரை நகர அதிமுக செயலாளர் பிச்சை, துணை செயலாளர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர் சிவக்குமார், நகர அதிமுக வை சேர்ந்த ஹனிபா, ல.முத்துக்கருப்பன் ஆகியோர் உடனிருந்தனர். 

Close