பரபரப்பான விமான நிலையம் தகுதியை தக்க வைத்தது துபாய்!

Daily_News_8518596887589துபாய் விமான நிலையம் அதிக பயணிகள் வருகையால், உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற பெருமையை தக்க வைத்துள்ளது.கடந்த ஆண்டு துபாய் விமான நிலையம் வழியாக 7.8 கோடி பயணிகள் சென்றுள்ளனர். இவர்களில் துபாய், பிரிட்டன், சவுதி அரேபியாவில் இருந்து வந்த பயணிகளும் அடங்குவர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு துபாய்க்கு 1.04 கோடி இந்தியர்கள் வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 17 சதவீத அதிகரிப்பாகும். இதுபோல் பிரிட்டன், சவுதி அரேபியாவில் இருந்தும் துபாய் விமான நிலையத்துக்கு வந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் இருந்து 57 லட்சம் பேரும், சவுதி அரேபியாவில் இருந்து 55 லட்சம் பேரும் துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக சென்றுள்ளனர் என துபாய் விமான நிலைய புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் 240க்கும் மேற்பட்ட இடங்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வான் போக்குவரத்து உளள்து.

கடந்த 2014ம் ஆண்டு உலகிலேயே அதிகமாக 7.04 கோடி பயணிகள் துபாய் வழியாக சென்றுள்ளனர். இது பிரிட்டனின் ஹீத்ரு விமான நிலையத்தை விட அதிகம்.
தற்போது 7.8 கோடி பயணிகளுடன் உலகின் முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளது துபாய் விமான நிலையம். துபாயில் அல்மக்தவும் சர்வதேச விமான நிலையம் கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது. இது முழுமையான பயன்பாட்டுக்கு வந்தால் பயணிகள் வருகை எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த விமான நிலையம் 12 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டது என துபாய் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Close