ஆப்பிள் ஐபோன்களில் லை-பை தொழில் நுட்பம்!

blogger-image--912541849ஆப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு வரும் ஐபோன்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணம் அவற்றின் ஆகச் சிறந்த தொழில்நுட்பமும், வருங்காலத்தை கணித்து புதிய வசதிகளை உள்ளடக்கியதாக அவை இருப்பதுதான்.

இதன் தொடர்ச்சியாக, வருங்காலத்தில் அறிமுகமாகவுள்ள ஐபோன்களில் அதிவேக இணைய இணைப்புத் தொழில்நுட்பமான லை-பை(LiFi) வசதியை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தொழில் நுட்பமானது iOS 9.1 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகமாகும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், இத்தொழில் நுட்பத்தின் வாயிலாக வினாடிக்கு 224 ஜிகாபைட் வேகத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Close