அதிரை இளைஞர்களின் கோரிக்கையை ஏற்ற அதிரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் !

நேற்று (03-11-2014)இரவு கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் மீது சூடான குழம்பு ஊற்றி தோல் வெந்த நிலையில் அதிரை அரசு மருத்துவமனைக்கு ஒருவர் வந்து இருந்தார். அந்த நேரத்தில் அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் யாரும் இல்லை .அந்த நபர் வழியில் கதறி கொண்டு இருந்தார் .அரசு மருத்துவமனைக்கு அருகில் இருந்த இளைஞர்களிடம் தகவல் தெரிவிக்கபட்டது. உடனே இளைஞர்கள் அங்கு சென்று அந்த நபருக்கு ஆறுதல் கூறியும் ,15 நிமிடம் கழித்து வந்த பணியாளர் மூலம் அவருக்கு முதலுதவி அளித்து அவரை பட்டுகோட்டைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அப்போது அங்கு பணியாற்றும் ஒருவர் கூறுகையில் :


அதிரை அரசு மருத்துவமனையில் போதுமான பணியாளர்கள் இல்லை என்றும் தற்போது நான் மற்றும் தான் இருக்கிறேன் என்றும் அதுமட்டும்யின்றி எங்கள் சம்பளத்தை வைத்து நாங்கள் ஒரு நபரை வேலைக்கு வைத்து இருக்கிறோம் என்று  கூறினார் .மேலும் அவர் நாளை காலை டாக்டர் வருவார் அவரிடம் பேசி கொள்ளுங்கள் என்று கூறினார் .

இதனை அடுத்து இன்று  காலை 10.00AM மணியளவில் 30க்கும் மேற்பட்ட  அதிரை இளைஞர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மருத்துவர்களிடம் ஏன் அதிரை அரசு மருத்துவமனைக்கு போதுமான பணியாளர்கள் இல்லை ? என்று கேள்விகள் எழுப்பினர்கள் .

இதனை அடுத்து டாக்டர்கள் நேற்று நடந்த தவறுக்கு வருந்துகிறோம் என்றும் இதற்குரிய தீர்வும் கூடிய விரைவில்  எடுக்கபடும் என்றார்கள் . 

அப்போது அங்கு உள்ள டாக்டர்கள் அதிரை இளைஞர்கள் இடம் ஒரு கோரிக்கை வைத்தார்கள் :  

நமதூர் மருத்துவமனையில் 4 டாக்டர் பணியிடம் உள்ளது .ஆனால் தற்போது 3 டாக்டர்கள் மட்டும் தான் இருக்கிறோம் என்றும் கூறினார்கள் .மேலும் 3 டாக்டர்கள் வந்தால் இங்கு 24 நேர சேவை செய்யலாம் என்றார்கள்.இதனை நாங்கள் செய்யயிலாது என்றும் இதற்குரிய தீர்வை நீங்கள் தான் மேல் இடத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்றார்கள் .
இதற்குரிய முயற்சியில் அதிரை இளைஞர்கள் கூடிய விரைவில் களம் இறங்க உள்ளனர் .  

Advertisement

Close