அதிரையில் தீக்காயம் பட்டு கதறும் நபர்! அரசு மருத்துவமனையில் பரிசோதிக்க ஆள் இல்லாததால் பரபரப்பு!

அதிரை அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தில் சூடான குழம்பு ஒரு நபர் மீது ஊற்றி தோல் வெந்தது. இதனை அடுத்து ஆட்டோவில் இவர் அதிரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஆனால் அதிரை அரசு மருத்துவமனையில் இவரை பரிசோதிக்க ஆள் இல்லாமல் கதரிக்கொண்டுள்ளார். இந்த அவலம் நமதூர் அரசு மருத்துவமனையில் சற்றுமுன் நடந்தது. இது குறித்து தகவல் தெரிவித்த பின்னார் 15 நிமிடங்கள் கழித்து ஒரு அரசு மருத்துவமனை ஊழியர் வந்துள்ளார். இது குறித்து அவரிடம் விசாரித்ததில் ஆள் இல்லை என்று தட்டிக்கழித்துள்ளார்.

என்ன தான் சகல வசதிகள் நமதூரில் இருந்தாலும் ஆபத்துக்கு பரிசோதிக்க ஒரு நல்ல மருத்துவமனை இல்லை என்பது சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

களத்திலிருந்து: காலித் அகமது (அதிரை பிறை)

Advertisement

Close