அண்ணன் பெயரில் பாஸ்போர்ட் சிங்கப்பூரிலிருந்து வந்தவர் கைது!

49529962அண்ணன் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரிலிருந்து வந்த புதுக்கோட்டை நபரை திருச்சி விமான நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் ராயவரம் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி கருப்பன் மகன் சேவகன் (43). இவர் வியாழக்கிழமை இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி வந்தார். அவரது பயண ஆவணங்களை பரிசோதித்த குடியேற்றப்பிரிவு போலீஸார், அவர் தனது அண்ணன் ஆறுமுகம் பெயரில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து பயணித்திருப்பது தெரியவந்தது

இதனையடுத்து அவரை விமான நிலைய போலீஸில் ஒப்படைந்ததின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து சேவகனை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Close