ஜப்பானில் நிலநடுக்கம் டோக்கியோ குலுங்கியது!

20150623-japanஐப்பானில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தலைநகர் டோக்கியோ குலுங்கியது.

இதுகுறித்து அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

டோக்கியோவுக்கு தெற்கே உள்ள கவஸாகி நகரில் வெள்ளிக்கிழமை காலை 7.41 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4.11 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.6 அலகுகளாகப் பதிவானது என்று அந்த மையம் தெரிவித்தது.இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Close