திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பட்டம் பெற்ற அதிரை மாணவர்கள் (படங்கள் இணைப்பு)

   திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ளது பிரபலபிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரியான ஜமால் முஹம்மது கல்லூரி. தமிழக அளவில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாகவும் திருச்சியில் முதன்மை கல்லூரியாகவும் உள்ள இந்த கல்லூரியில் அதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் SELF FINANCE மாணவர்களுக்கான 62 வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அதிரையை சேர்ந்த பல பாடபிரிவுகளின் கீழ் படித்த 10க்கும் மேற்பட்ட அதிரை மாணவர்களும் பட்டம் பெற்றனர். இவர்கள் எதிர்காலத்தில் மிகச்சிறந்த குடிமக்களாக வருவதற்க்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம். 

  

  

  

    

  
படங்கள்: பாசித் அலி

Close