ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கி 5 வீரர்கள் பலி!

f90470a4-2193-4ca1-acb7-af1998504e0b_S_secvpfஐரோப்பியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு கொட்டி கிடக்கும் பனியில் வீரர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட ‘செக்’ நாட்டை சேர்ந்த 17 பேர் 2 குழுக்களாக வந்தனர்.

அவர்கள் இஸ்ஸ்புருக்கில் உள்ள ஜன்ஸ்ஜோக் மலை அருகே வாட்டென்டல் பள்ளத் தாக்கில் முகாமிட்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு திடீரென கடும் பனிச்சரிவு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தும் 5 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலரை தேடும் பணியும் நடக்கிறது.

Close