மதுரையில் பல்லாயிரக்கணக்கனோர் ஒன்றுகூடிய த.மு.மு.க வின் சிறைவாசிகள் விடுதலை மீட்பு போராட்டம்! (படங்கள் இணைப்பு)

12695867_752201721583216_700465445_nகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் தவிக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி தமுமுக, மமக சார்பாக சிறைவாசிகள் மீட்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தை இன்று மதுரையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு அதற்க்கான அழைப்புப் பணிகளையும், ஏற்பாடுகளையும், தெருமுனைப் பிரச்சாரங்களையும் தமுமுக கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகின்றது. அந்தந்த ஊர்களில் செல்லும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவருக்கும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை அதிரையின் பல பகுதிகளில் உள்ளவர்களை அந்தந்த பகுதிகளுக்கு சென்று ஏற்றிவந்து அதிரை பிலால் நகர் ஈசிஆர் சாலை அருகே அனைத்து வேண்களும் புறப்பட்டு சென்றனர். மதுரையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி சிறைவாசிகளை விடுதலை செய்யுமாறு கோஷங்களை எழுப்பினர்.

Close