Adirai pirai
posts தமிழகம்

அதிரை உட்பட தஞ்சை முழுவதும் பொது விடுமுறை அறிவிப்பு!

holidayகும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா பிரசித்தி பெற்றது. அந்த வகையில், வரும் 13ம் தேதி மகாமகப் பெருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான மகாமக தீர்த்தவாரி 22ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி அரசு சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மகாமகத் திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வரும் 22ம் தேதி பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள வங்கிகள், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் 22ம் தேதி மூடப்பட்டிருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy