துபாயில் 530 கிராம் எடையில் பிறந்த குழந்தை!

95c9fe1c-70ff-4e3f-a189-c91a94890502_S_secvpfஸ்பெயினில் இருந்து துபாயில் புலம்பெயர்ந்து வாழும் சுசி மற்றும் கிறிஸ்டோபர் சக்ரமென்டோ தம்பதிக்கு, கடந்த அக்டோபர் மாதம் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 14 வாரங்கள் முன்கூட்டியே அதாவது குறைபிரசவமாக பிறந்த இந்த குழந்தை வெறும் 530 கிராம் எடையில் இருந்தது.

ஒரு ‘ஐபேடின்’ எடையை விட குறைவான (பொதுவாக ஒரு ஐபேடு 600 கிராம் எடை கொண்டது) எடையில் இருந்த இந்த குழந்தையை டாக்டர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து கண்காணித்தனர். இதற்காக அமைக்கப்பட்டு இருந்த டாக்டர்கள் குழுவில், இந்திய டாக்டர் ஒருவரும் இடம் பெற்றிருந்தார்.

நிக்கோலஸ் என பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு அல்லும்பகலும் கண்ணும், கருத்துமாக டாக்டர்கள் ஊட்டச்சத்து மற்றும் சிகிச்சை அளித்தனர். இதனால் குழந்தையின் எடை வேகமாக அதிகரித்தது. சுமார் 110 நாட்கள் கண்காணிப்புக்குப்பின், நேற்று தனது பெற்றோருடன் குழந்தை வீடு திரும்பியது. குழந்தையின் நேற்றைய எடை 1.90 கிலோ கிராம் ஆகும்.

குறைபிரசவத்தில் பிறந்தாலும், தங்கள் குழந்தையை உயிருடன் மீட்டு தந்த டாக்டர்கள் குழுவுக்கு பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

Close