அதிரை மரைக்கா குளம் ஆற்று நீரில் சிறுவர்கள் மீன் பிடிக்கும் பணியில் மும்முரம் !

கடந்த சில நாட்களாக அதிரை காட்டுக்குளம், செக்கடி குளம், ஆலடிக்குளம், கரிசல்மணி ஏரி, வெள்ளக்குளம், மண்ணப்பன் குளம் போன்றவைகள் சி.எம்.பி வாய்க்கால் வழியாக ஆற்று நீராலும் பம்பிங் முறையாலும் நிறைக்கப்பட்டு வருகிறது.

அதிரை பகுதியில் உள்ள  அனைத்து குளங்களையும் நிரப்பும் முயற்சியில் அதிரை பேரூர் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது .இதனை அடுத்து மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் மரைக்கா குளத்திற்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர் .இதனை அடுத்து நேற்று மதியம் 1.30 மணியளவில் அதிரை பேரூராட்சி தலைவர் ,துணை தலைவர் ,சமூக ஆர்வலர்கள், தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் முன்னிலையில் மரைக்கா குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் ஏற்க்கனவே ஓரளவு நிரம்பி காணப்பட்ட மரைக்கா குளம், இப்பொழுது நிரம்பும் தருவாயில் உள்ளது. இக்குளத்தில் சிறுவர்கள் இறங்கி மீன் பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடிபட்டு வருகின்றனர்.

அதிரை குளங்களுக்கு  தண்ணீர்  கொண்டு தொடர் முயற்சியில் இடுப்பட்டு வரும் அதிரை பேரூர் மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகிய அனைவருக்கும் அதிரை பிறை சார்பாக நன்றிகளையும்,   வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

Close