சவுதியின் விவகாரங்களில் தலையிடா வேண்டாம் மன்னர் சல்மான் வேண்டுகோள்!

5491534சஊதி தலைநகர் ரியாதில் நேற்று ஞாயிறன்று இடம்பெற்ற வருடாந்த ஜனாத்ரியா எனப்படும் கலாச்சார விழாவின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய சஊதி அரேபிய மன்னர் சல்மான் எமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என ஏனைய நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“ஏனையவர்களின் விவகாரங்களில் தலையீடு செய்யாமல், எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது எங்களது உரிமை. எனவே, எமது உள்விவகாரங்களில் தலையீடு செய்யவேண்டாம் என நாம் ஏனைய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” என சல்மான் தெரிவித்ததாக அரசு செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

“முஸ்லிம் நாடுகளை பாதுகாப்பதற்கும் அவர்களின் சுதந்திரத்தினை உறுதிப்படுத்துவதற்கும் சகல இடங்களிலுமுள்ள அரபு மற்றும் முஸ்லிம் சகோதரர்களின் ஒத்துழைப்புடன் அவர்களது இஸ்லாமிய நிலங்களை நாம் பாதுகாக்க உதவுகிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

Close