இது சின்ன சிங்கப்பூரா? இல்லை அசிங்கப்பூரா?

அதிரையில் சுகாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. எந்த தெருவுக்கு சென்றாலும் முக்கை மூடிச்செல்லும் அளவுக்கு குப்பைகளின் துர்நாற்றங்கள். இதற்க்கு எந்தப் வார்டும் தெருக்களும் விதிவிலக்கு இல்லை. எல்லா வார்டுகளிலும் இந்த பிரச்சனை தொடர்ந்து நிலவி வருகிறது. வாரம் ஒரு முறை தெருக்களுக்கு குப்பை வண்டி வருவதால் வாரம் முழுவதும் சேர்ந்த குப்பைகளை மக்கள் தெருக்களில் கொட்டுகின்றனர்.

இதனால் நமதூர் மிகவும் பின்தங்கிய ஊர் போலவே காட்சி தருகிறது. அதிரையில் இந்த பிரச்சனை தீர்வற்றாதாகியுள்ளது. அதிரை வாய்க்கால் தெரு பள்ளிக்கூடம் அருகே நாய் ஒன்று கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இறந்துக் கிடந்தது. இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த சமுக ஆர்வலர் ஒருவர் சாக்கடை தூர்வாரும் நபரிடம் பணம் கொடுத்து அதனை ஓரமாக அப்புறப்படுத்த சொல்லி விட்டு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கூறி இறந்த நாயின் உடலை அங்கிருந்து எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் 4 நாட்கள் கழித்து நேற்று தான் அந்த நாயின் உடலையும் அங்கு குவிந்திருந்த குப்பைகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் 4 நாட்களாக கடும் நாற்றம் வீசியுள்ளது. பொதுமக்களின் நலனில் அக்கரை காட்டாமல் இப்படி அலெட்சியமாக செயல்படுவது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. அதிரையின் இந்த அவல நிலையை பல முறை நமது அதிரை பிறை தளத்தில்  பதிந்த உடன் குப்பைகளை அள்ளுவதோடு சரி. பின்னர் மீண்டும் அப்பகுதியில் குப்பைகள் குவிந்து தான் கிடக்கின்றன. நாமும் எத்தனை முறை தான் இது போன்ற செய்திகளை பதிவது. அந்தந்த ஆட்சியாளர்களுக்கும் பொறுப்பில் உள்ளவர்களும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படாத வரை அதிரை சின்ன சிங்கப்பூர் அல்ல, சகாதாரமான ஊராக கூட மாறாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close