பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து கவர்ந்த கப்பல்கள்!

Daily_News_9690319299698பாம்பன் கடல் பகுதியில் நேற்று ஒரே நேரத்தில் சரக்கு கப்பல்களும், மீன்பிடி படகுகளும் தூக்குப் பாலத்தைக் கடந்து சென்றன.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு பாக் ஜலசந்தி கடல் வழியாக நேற்று காலை பாம்பன் கடல் பகுதிக்கு வந்த ஒரு சரக்கு கப்பலும், சென்னை துறைமுகத்திலிருந்து வந்த இரண்டு பர்ஜர்களும் பாம்பன் ஹெர்ஜர் தூக்குப்பாலத்தைக் கடந்து சென்றன. இந்தக் கப்பல்கள் மன்னார் வளைகுடா கடல் வழியாக முறையே மும்பை, தூத்துக்குடி துறைமுகங்ளை நோக்கி சென்றன.

இதேபோல் மன்னார் வளைகுடா கடலோர பகுதியிலிருந்து, பாம்பன் கடல் பகுதிக்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள், தூக்குப்பாலத்தைக் கடந்து பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு சென்றன. இதில் மீன்பிடி படகு ஒன்று தென்கடல் பகுதியில் சாலை பாலத்திற்கு அருகே பாறையில் சிக்கி நின்றது. பாம்பன் மீனவர்களின் உதவியோடு அப்படகு மீட்கப்பட்டது. ஒரே நேரத்தில் கப்பல்களும், மீன்பிடி படகுகளும் பாலத்தை கடந்து இருவழித் தடத்திலும் கடலில் சென்றதை சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

நன்றி:தினகரன்

Close