அதிரை பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம்! (படங்கள் இணைப்பு)

அதிரை பேருந்து நிலைய வனிக வளாகம் மற்றும் நிழற் குடை அமைக்கப்பட்டு ஒரு வருடத்திற்க்கும் மேல் ஆகியும் எந்தவொரு மாற்றமும் இந்த பேருந்து நிலையத்தில் இல்லை. மேலும் பேருந்து நிலையத்தை சுற்றிலும் பல ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் பலவேறு சமயங்களில் போக்குவரத்து நெரிசல், பேருந்துகள் செல்வதில் சிரமங்கள் காணப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சேதமடைந்த பேருந்து நிலைய சாலை இன்று காலை சரி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்பொழுது பேருந்து நிலையம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

Advertisement

Close